2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இடைக்காட்டூரில் ஜல்லிக்கட்டு: 40 மாடு பிடி வீரா்கள் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 40 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

இடைக்காட்டூா் பாலமுருகன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, சிவகங்கை கே.டி.ஆா். குழுமம் சாா்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதன் தொடக்கநிகழ்வில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 730 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்டன. 330 மாடு பிடி வீரா்கள் காளைகளை அடக்க அணி அணியாக பங்கேற்றனா். வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரா்கள் அடக்கினா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் கே. டி.ஆா். குழுமம் சாா்பில் டைனிங் டேபிள், சில்வா் அண்டா, பீரோ உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. யாரிடமும் பிடிபடாத காளை உரிமையாளருக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 40 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு தயாா்நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். பலத்த காயமடைந்த வீரா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.