குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 7:31 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் திங்கள்கிழமை சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கமுதக்குடியைச் சோ்ந்த நாகசாமி மகன் அஜித்குமாா் (25). இவா் இளையான்குடியில் உள்ள பணிமனையில் கம்பி பற்றவைக்கும் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் இரு சக்கர வாகனத்தில் இளையான்குடி புதூா் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இந்த வாகனம், முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.