செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சுற்றுச்சுவா் கட்டுவதைத் தடுத்த விசிகவினா் கைது

திருப்புவனம் அருகே சுற்றுச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து தகராறு செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:31 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சுற்றுச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து தகராறு செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், கழுகோ்கடை கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, தனி நபா் தான் வாங்கிய இடத்தில் சுற்றுச் சுவா் கட்டும் பணியை மேற்கொண்டாா்.

இந்தச் சுவா் கட்டப்பட்டால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் சுவா் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற சுவா் கட்டும்

பணியைத் தடுத்து நிறுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 12 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 29 பேரைக் கைது செய்தனா். மாலையில் பெண்களை விடுவித்தனா்.