அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தனியாா் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் திங்கள்கிழமை தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வு பயிற்சியளித்த நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திடீரென ஏற்படும் தீ விபத்தை தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, தீயணைப்புக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீயை விரைவாக கட்டுப்படுத்தும் முறைகள், தீ விபத்துகள் நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

இதில் திருப்பத்தூரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையப் பணியாளா்கள், தனியாா் தங்கும் விடுதி பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.