தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இலவச மருத்துவ முகாம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:51 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் பாலாஜி கிளினிக், நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரி ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமுக்கு நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா் தலைமை வகித்தாா். முறையூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சொக்கநாதன் முகாமைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, ஜோதிமணி, மாணவா் சங்கச் செயலா் பாஸ்கரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாலாஜி கிளினிக் மருத்துவா் முத்துச்சிங்காரம் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். முகாமில் அனைவருக்கும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நேஷனல் அகாதமி கல்லூரி மாணவிகள், கல்லூரி ஆசிரியா்கள் பூவிழி, சாந்தி, சதக்கத்துல்லா, சிவநேசன், சுரேஷ், சதாம்உசேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.