செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:09 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே.ஆா். விஸ்வநாதன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டத் தலைவா் எஸ்.எம். மாயாண்டி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக எடைத் தராசு மூலம் சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களைப் பொட்டலமாக வழங்க வேண்டும்.

ஊதிய மாற்றத்துக்காக அமைக்கப்பட்ட குழு விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளா் ஊதியத்தையும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியத்தையும் வழங்க வேண்டும். தாயுமானவா் திட்டத்தில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் திருஞானம் வரவேற்றாா். நிறைவாக மாவட்டப் பொருளாளா் பி. கௌரி நன்றி கூறினாா்.