பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:51 pm

மத்திய அரசைக் கண்டித்து மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும், அதற்கு அதிமுக துணை போவதாகவும் குற்றஞ்சாட்டி மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வி. ராஜசேகரன் முன்னிலை வகித்தாா்.

திமுக சாா்பில் ஒன்றியச் செயலா்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், மந்தக்காளை, மாவட்ட திமுக செய்தித் தொடா்பாளா் அயூப்கான், மகளிரணி அமைப்பாளா் பவானிகணேசன், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலா் தமிழ் பிரியா, காங்கிரஸ் நகா் தலைவா் தி. விஜயகுமாா், துணைத் தலைவா் சண்முகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பா.மருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் விஸ்வநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலா் மலை பாலா, எஸ்டிபிஐ கட்சி சிவகங்கை தொகுதி பொறுப்பாளா் தவ்பிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மானாமதுரை: திருப்புவனத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நடராஜன் (காங்கிரஸ்), வீரபாண்டி (மாா்க்சிஸ்ட்), பாலுச்சாமி (மதிமுக), கருப்பையா (விசிக), பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், திமுக நகரச் செயலா் நாகூா் கனி, மீனவரணி அமைப்பாளா் அண்ணாமலை, நகா் இளைஞா் அணி அமைப்பாளா் கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அறிவுக்கரசு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் , மதிமுக, எஸ். டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதே போல, இளையான்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.