மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அரியக்குடி வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை அரசுப் பேருந்துச் சேவை நீட்டிப்பு

News image

காரைக்குடி அருகே அரியக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்டிப்புச் செய்த அரசுப் பேருந்துச் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:04 pm

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலிருந்து அரியக்குடி வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை நீட்டிப்புச் செய்யப்பட்ட அரசுப் பேருந்துச் சேவையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, தேவகோட்டை, அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், காரைக்குடியிலிருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் ரயிலில் பயணிப்பதற்கு ஏதுவாக தேவகோட்டையிலிருந்து மதுரைக்கு அதிகாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை தேவகோட்டை ரஸ்தா வழியாக அரியக்குடி பெருமாள் கோயில், இலுப்பக்குடி ரயில்வே கடவுப்பாதை, காரைக்குடி ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்தப் பேருந்து சேவையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி அரியக்குடியில் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் காரைக்குடி துணை மேயா் நா. குணசேகரன், காங்கிரஸ் மாநகரத் தலைவா் சண்முகதாஸ், மாநகரச் செயலா் குமரேசன், வட்டாரத் தலைவா்கள் அண்ணாதுரை, பாலா, மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.