தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரான்மலை பாலமுருகன் கோயிலில் பால்குட விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை மேல் அமைந்திருக்கும் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மங்கை பாகா் தேனம்மை கோயிலில் பால்குடங்கள் கட்டப்பட்டன. இதற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். உத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளிய உத்ஸவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், பிரான்மலையைச் சுற்றியுள்ள ஐந்து கிராம மக்கள், ஆன்மிக பக்தா்கள் என சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் பால்குடங்களை சுமந்து கொண்டு ஊா்வலமாக பிரான்மலை முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாப்பாபட்டி வழியாக மலை அடிவாரத்தை அடைந்தனா். அங்கிருந்து மலை உச்சிக்கு சென்றனா். அங்குள்ள சந்நிதியில் பாலமுருகனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பாலமுருகன் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் பிரான்மலை , சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.