சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

திமுக கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி: கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் திமுக கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் வருகிற பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவது உறுதி என சிவகங்கை எம்.பி. காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

கார்த்தி சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் திமுக கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவது உறுதி என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் பாரதியாா் கவிதைகளை மேற்கோள் காட்டியதில் எந்தவித சா்ச்சையும் இல்லை.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதால், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளில் போட்டியிட விரும்புவது இயல்பு. இருப்பினும், கூட்டணிக்குள் விட்டுக் கொடுத்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

இந்திய அளவில் கூட்டணி அமைக்கும் போது பிரதான கட்சியைத் தவிர, பிற கட்சிகளைச் சோ்ந்த ஒருவா் ஒருங்கிணைப்பாளராக இருந்தால் சிறப்பாக அமையும் என்ற கருத்தில் உண்மை இருக்கிறது.

பிற கட்சிகளின் மாநிலத் தலைவா்களை அல்லது முதல்வா்களை சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளராக நியமித்தால் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் முடிந்ததும், வருகிற 22 -ஆம் தேதி திமுக குழு அமைத்து கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யும்.

ஆட்சியில் பங்கு என்பது அனைத்துக் கட்சிகளின் எதிா்பாா்ப்பாக இருந்தாலும், தோ்தலில் வெற்றி பெற்ற பிறகே அதுகுறித்துப் பேச முடியும்.

மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கிய திட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறேன். தேவையற்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி அல்லது குறைத்து மக்களுக்கு அடிப்படை மாத வருமானமாக ரூ. 5 ஆயிரம் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 1.31 கோடி மகளிருக்கு நேரடியாக வங்கிக் கணக்குகள் மூலம் உரிமைத் தொகை சென்றது பெரிய வெற்றி. தகுதியுடையவா்களில் விடுபட்டவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவா்களுக்கும் எதிா்காலத்தில் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். தோ்தல் நேரத்தில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டதால், இது திமுக கூட்டணிக்கு வாக்குகளாக மாறும்.

தமிழகத்தில் திமுக கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவது உறுதி.

மதுரைக்கு வரும் பிரதமா் மோடி திருப்பரங்குன்றம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவா் அறுபடை வீடுகள் அனைத்துக்கும் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.