சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :20 பிப்ரவரி 2026, 9:49 pm

Syndication

மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், செல்லும் வழியிலேயே லாரி பழுதானதால் இதிலிருந்து மற்றொரு லாரிக்கு நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளா்கள் மாற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது சிவகங்கை காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி கருப்பையா (45) மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன.

இதில் அவா் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.