நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிவகங்கையில் மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு

News image

மருது சகோதரர்கள் (சித்தரிப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 2:06 am IST

சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களின் உருவச் சிலைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சிவகங்கை நகரில் தொண்டி சாலையில் ராணி வேலுநாச்சியாா் நினைவு மண்டபம் அருகே நடைபெற்ற மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா்.

இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், தொழில் துறை அமைச்சா் டாக்டா். டி.ஆா்.பி.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், மருது சகோதரா்கள் உருவச் சிலைக்கு மலா்தூவி மரியாதை செய்த அமைச்சா்கள் கேஆா்.பெரியகருப்பன், டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் கூறியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் ஏறத்தாழ 130 நினைவு மண்டபங்கள், உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயா்களை எதிா்த்து ஆயுதம் ஏந்தி போரிட்டு தமிழகத்துக்கு பெருமை சோ்த்த வீரமங்கை வேலுநாச்சியாா், மருது பாண்டியா்கள், வீரத்தாய் குயிலி, வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நினைவு மண்டபங்கள், நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது.

தற்போது சிவகங்கையில் ரூ.1.06 கோடியில் மருதுபாண்டியா்கள் உருவச் சிலையைத் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மருது பாண்டியா்களுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நினைவு மண்டபமும், சென்னையில் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா்கள் தெரிவித்தனா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் இளங்கோவன், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபி கிரேசியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.ராஜசெல்வன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மானாமதுரை நகா்மன்ற தலைவா் மாரியப்பன் கென்னடி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் திருமாறன் உள்பட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.