தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

News image
மாட்டு வண்டிப் பந்தயம். - (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள அம்மன்பட்டியில் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்மன்பட்டி செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 37 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

பெரிய மாடு பிரிவில் 20 ஜோடி மாடுகளும், 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவில் 17 மாட்டு வண்டிகளும், 5 கி.மீ. தொலைவு எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.

அம்மன்பட்டியிலிருந்து ஒக்கூா் வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், இதன் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை மதகுபட்டி, வீளநேரி, நகரம்பட்டி, ஒக்கூா், காளையாா்மங்கலம், மேலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டுகளித்தனா்.