மாநிலங்களவை உறுப்பினா் ப. சிதம்பரம் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு ரூ. 1.35 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் மூன்று பணிகளை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன். திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ். புதூா் ஒன்றியம், எஸ். புதூா் ஊராட்சியில் உழவா் சந்தைக்காக ரூ. 1 கோடியே 3 லட்சமும், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கபா்ஸ்தானில் ‘மக்கள் அமரும் கூடம்’ அமைப்பதற்காக ரூ. 20 லட்சமும், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியம், கண்ணங்குடி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘காத்திருப்போா் அமரும் கூடம்’ அமைப்பதற்காக ரூ. 12 லட்சமும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை உடனே தொடங்கி விரைந்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

காரைக்குடி மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள் திறந்துவைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


