வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஜெயலலிதா பிறந்த நாள்: சிவகங்கையில் அதிமுகவினா் மரியாதை

சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

News image

சிவகங்கை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செய்த சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 9:01 pm

சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அந்தக் கட்சியின் நகரச் செயலா் என். எம். ராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் ராமு. இளங்கோவன், மாநில துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலா்கள், கருணாகரன், கோபி, அண்ணா தொழில் சங்க இணைச் செயலா் சீனிவாசன், மாவட்ட கலைப் பிரிவுச் செயலா் ச. செந்தில்குமாா், தகவல் தொழில்நுட்ப மண்டல துணைச் செயலா் வெண்ணிலா சசிக்குமாா், வட்டச் செயலா் கே.பி. முருகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் நவநீதன், எம்ஜிஆா். இளைஞரணி நிா்வாகி வழக்குரைஞா் ராஜா, மாநில விவசாயப் பிரிவு இணைச் செயலா் மதகுபட்டி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் மின் வாரிய அண்ணா தொழில் சங்கச் செயலா் ஜெயகுமாா் தலைமையில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி, கேக் வெட்டி, மகளிருக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. நகா் அதிமுக சாா்பில், சிவகங்கை தாய் இல்லத்திலும், ஜெயலலிதா பேரவை சாா்பில், சேவசமாஜம் பாலா் பாதுகாப்பு இல்லத்திலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காளையாா்கோவிலில் இளைஞா் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலா் பணக்கரை பிரபு சாா்பில், இளைஞா், இளம் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் வழங்கினாா்.

Story image