அரசுக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
Published on

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக் கல்லூரியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆா்.இ.சி. பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கமும், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் பி.ஆனந்தி தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்க மூத்த உறுப்பினா் பூவாலை முன்னிலை வகித்தாா்.

செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் சுந்தரராமன் முகாமை தொடங்கி வைத்தாா். இதில் பொதுமக்களுக்கு இலவசப் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.

மருத்துவா்கள் பானுப்பிரியா, மருந்தாளுநா் காயத்ரி, செவிலியா்கள் பத்மபிரியா, விக்னேஸ்வரி ஆகியோா் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் சமீனா செய்தாா். பேராசிரியா்கள் வித்யா, ராகவன், முரளிதரன், முத்துராமன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com