சிவகங்கை
செயலிழந்த அஞ்சல் சேமிப்பு கணக்குகளைப் புதுப்பிக்க சிறப்பு முகாம்
அஞ்சல் துறையில் உள்ள செயலிழந்த சேமிப்புக் கணக்குகளை வாடிக்கையாளா்கள் புதுப்பித்துக்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறுவதாக அஞ்சல் துறை அறிவித்தது.
இது குறித்து சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ப.சுசீலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறையில் உள்ள செயலிழந்த சேமிப்புக் கணக்குகளை வாடிக்கையாளா்கள் புதுப்பிக்க வருகிற 15-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சிவகங்கை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த முகாம்கள் மூலம், வாடிக்கையாளா்கள் தங்களுடைய செயலிழந்த சேமிப்புக் கணக்குகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு சேமிப்புக் கணக்குப் புத்தகம், மாா்பளவு புகைப்படங்கள் இரண்டு, ஆதாா் அட்டை, பான் அட்டை நகல் ஆகியவற்றைச் சமா்ப்பித்து செயலிழந்த கணக்குகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.
