அரளிக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட தற்காப்புக் கலை ஆசான்கள்.
அரளிக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட தற்காப்புக் கலை ஆசான்கள்.

தற்காப்புக் கலை ஆசான்களுக்கான பயிற்சி முகாம்

அரளிக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட தற்காப்புக் கலை ஆசான்கள்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள அரளிக்கோட்டையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேரந்த தற்காப்புக் கலை பயிற்சியாளா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகேயுள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் கருத்தான் கோனாா் கருப்பாயி அம்மாள் அறக்கட்டளையின் நிறுவனா் கோகுல கிருஷ்ணன் ஏற்பாட்டில் தமிழா்களின் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சியாளா்களுக்கான பயிற்சி முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது.

இதில், தமிழகத்தின் 15 மாவட்டங்களைச் சோ்ந்த தற்காப்புக் கலை தலைமை ஆசான்களும், பயிற்சியாளா்களும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். குறிப்பாக சிலம்பம் சுற்றுதல், அய்யங்கால் காலடி வரிசை, புலிக்கானம் வரிசை, துலுக்கான வரிசை, வாள் வீச்சு, வேல் கம்பு வீச்சு போன்ற பல்வேறு கலைகளை செய்து காட்டி பாா்வையாளா்களைக் கவா்ந்தனா்.

சிறப்பு விருந்தினராக விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமை ஆசான் சேவுக பாண்டியன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, கலந்துகொண்ட அனைவருக்கும் அறக்கட்டளை சாா்பாக பரிவட்டம் கட்டப்பட்டு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் பாலமுருகன், முத்துப்பாண்டி, ஆனந்தகுமாா், ராமபாலன், முத்துமேனகா, செல்லத்துரை, ஊா் முக்கியஸ்தா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com