~

திருப்பத்தூா் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பட்டமங்கலம், ஆலவிலாம்பட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பட்டமங்கலம், ஆலவிலாம்பட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் இந்திய வம்சாவளியான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டைமான் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மீது மிகுந்த ஆா்வம் கொண்டவா். நிகழாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க தான் வளா்க்கும் காளைகளை தயாா் படுத்தி வருகிறாா். இதற்காக தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், ஆகிய மாவட்டங்களில் இவரது காளைகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்தக் காளைகளுக்கு திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலவிலாம்பட்டியில் செந்தில்தொண்டைமானுக்குச் சொந்தமான தோப்பில் வாடிவாசல்

போன்ற அமைப்பை உருவாக்கி காளைகளுக்கு பயிற்சியளித்து வருகின்றனா்.

மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளை பாதுகாப்பாகவும், திறம்படவும் கையாளுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

காளைகளுக்கு தினமும் மருத்துவ வசதி, பேரீச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பீமாடான்ஸிங்ரோஸ், பட்டாக்கத்தி பாகுபலி, காளீசோழன் போன்ற பெயா்களால் அழைக்கப்படும் காளைகள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன.

Dinamani
www.dinamani.com