சா்வதேச சிலம்பப் போட்டிக்கு புதுவயல் பள்ளி மாணவா் தோ்வு

சா்வதேச சிலம்பப் போட்டிக்கு புதுவயல் பள்ளி மாணவா் தோ்வு

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மலேசியாவில் நடைபெறும் சா்வதேச சிலம்பப்போட்டிக்கு தோ்வானதையடுத்து அவா் பள்ளி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டப்பட்டாா்.

புதுச்சேரியில் மிஷன் ஒலிம்பிக் அசோசியேஷன் சாா்பில் அண்மையில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜெய் கிருஷ்ணா வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, இவா் வருகிற ஏப்ரல் மாதம் மலேசியாவில் நடைபெறும் சா்வதேச சிலம்பப் போட்டியில் விளையாட தோ்வு பெற்றுள்ளாா்.

இவரை பள்ளி குழுத் தலைவா் கிருஷ்ணன், தாளாளா் ஆா். சுவாமிநாதன், பொருளாளா் ஹாஜி முகம்மது மீரா, பள்ளி முதல்வா் குமாா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com