சிவகங்கை
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஜன.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்கள் வருகிற 18 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வரைவு வாக்காளா் பட்டியலில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்கள் தங்களது பெயரை சோ்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும் அதற்குரிய படிவங்களை நிரப்பி, வருகிற 18- ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களிடம் வழங்கலாம். மேலும், https://voters.eci.gov.in/ இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
