எம்.ஜி.ஆா். பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

மறைந்த அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அவரது உருவச் சிலைகள், உருவப் படங்களுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Updated on

சிவகங்கை: மறைந்த அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அவரது உருவச் சிலைகள், உருவப் படங்களுக்கு அதிமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆா். உருவச் சிலைக்கு மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், நகரச் செயலா் என்.எம். ராஜா, ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலா் ராமு. இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவா் வெண்ணிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகராட்சி 27-ஆவது வாா்டில் பொங்கல் விழா: எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி இந்திரா நகா் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் பரிசுகள் வழங்கினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com