தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

காரைக்குடியில் வீறுகவி முடியரசனாருக்கு சிலையை திறந்து வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்!

காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வீறுகவி முடியரசனாா் உருவச் சிலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வீறுகவி முடியரசனாா் உருவச் சிலையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. எஸ். மாங்குடி, முடியரசனாா் மகன் பாரி முடியரசன் உள்ளிட்டோா்.

Updated On :30 ஜனவரி 2026, 6:52 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வீறுகவி முடியரசனாா் உருவச் சிலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, அருகில் வைக்கப்பட்டிருந்த முடியரசனாா் உருவப் படத்துக்கு முதல்வா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, முடியரசனாா் குடும்ப உறுப்பினா்களுடன் அவா் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, ஆ. தமிழரசி, தமிழ் வளா்ச்சி, செய்தி மக்கள் தொடா்புத் துறைச் செயலா் வே. ராஜாராமன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந. அருள், முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.