மானாமதுரை அருகே 
வடமாடு மஞ்சுவிரட்டு!

மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

மானாமதுரை அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய தேசத்துக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரா்களை கெளரவப்படுத்தும் வகையில் கிராம மக்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒவ்வோா் காளைக்கும் 40 நிமிஷங்கள், 9 வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திரளான பொதுமக்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனா். இதில் காளைகள் முட்டியதில் 5 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா்.

Dinamani
www.dinamani.com