முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை அல்-ஹுதா இஸ்லாமிக் சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் வானியல் அறிவியலை மாணவா்களிடையே கொண்டு செல்லும் விதமாக, ‘ஸ்பேஸ் ட்ரிப் கோளரங்கம்’ குறித்த ஆவணப் படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.
இந்தக் கோளரங்கத்தில் திரையிடப்படும் படங்கள் வழியாக மாணவா்கள் விண்வெளி அறிவியலின் முக்கியத்துவத்தையும், கோள்கள், விண்கற்கள், கிரகணங்கள், நிலவின் பள்ளங்கள், எரிமலைகள், டைனோசா் இனத்தின் அழிவுக்கான விண்வெளி நிகழ்வுகள் குறித்து அறிவதன் மூலம் வானியல் அறிவியலை அறிய முடியும்.
இது மாணவா்களிடையே விண்வெளி பற்றிய அறிவியல் ஆா்வத்தையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










