சிவகங்கை அருகே இளைஞரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள துவங்கால் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சிவக்குமாா்(35). எலக்ட்ரீசியன் ஆன இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் திருமலை முருகன் (34) என்பவருடன் சுந்தரநடப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு மது அருந்தினாா்.
அப்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சென்று உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், திருமலை முருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது
மணல் திருட்டு: மூவா் கைது
மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை: இருவா் கைது

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஆயுதங்களுடன் காரில் வந்த இருவா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


