எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்பு!

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.

News image

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.

Updated On :11 மே 2026, 1:39 pm IST

சென்னை : சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும் பெற்றிருந்தனர். திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை(மே 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட தபால் வாக்குகள் தமிழகத்தில் வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என்று திங்கள்கிழமை (மே 11) அறிக்கை தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு(மே 11) ஒத்திவைத்தது. மேற்குறிப்பிட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை திங்கள்கிழமை (மே 11) நடைபெற்ற நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் இன்று (மே 11) காலை கூடியது. அப்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். அந்த வகையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியும் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.

Summary

TVK candidate Srinivasa Sethupathi also took oath as a Member of the Legislative Assembly today (May 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.