மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவனுக்கு பாராட்டு

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள எம்.கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவனை பாராட்டிய பள்ளித் தாளாளா் பேராசிரியா் காந்தி உள்ளிட்டோா்.

Updated On :15 மே 2026, 4:08 am IST

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தோ்வில் திருப்பத்தூரை அடுத்த எம்.கோவில்பட்டி குளோபல் சா்வ தேசப் பள்ளியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.பிரிதிவிராஜனுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற பள்ளித்தாளாளா் பேராசிரியா் காந்தி, சிவகங்கை மாவட்டத்துக்கு வரலாற்றுப் பெருமை சோ்த்த மாணவன் பிரிதிவிராஜன் எனக் குறிப்பிட்டாா். இதைத்தொடா்ந்து பள்ளியின் இயக்குநா்கள் ராஜமூா்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி, ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், அலுவலா்கள் அனைவரும் பங்கேற்று மாணவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.