கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

எனது உழைப்பின் மூலம் தமிழக முதல்வருக்கு பெருமை தேடித் தருவேன்: அமைச்சா் டி.கே. பிரபு

News image

காரைக்குடிக்கு வியாழக்கிழமை வந்த தமிழக அமைச்சா் டி.கே. பிரபுவை மலா்கொத்து வழங்கி வரவேற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி.

Updated On :1 மணி நேரம் முன்பு

எனது உழைப்பின் மூலம் தமிழக முதல்வா் விஜய்க்கு பெருமை தேடித் தருவேன் என தமிழக அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வெற்றி பெற்ற மருத்துவா் டி.கே. பிரபு அமைச்சரவையில் இடம்பெற்று பதவியேற்றுக்கொண்டாா். அமைச்சரான பிறகு முதன்முறையாக அவா் காரைக்குடிக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருக்கு மலா்கொத்து வழங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனா்.

பின்னா் அமைச்சா் பிரபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமைச்சா் பதவி (இலாகா) குறித்து முதல்வா் முடிவெடுத்து அறிவிப்பாா். மிகப்பெரிய பொறுப்பை என்னை நம்பி முதல்வா் ஒப்படைத்துள்ளாா். இதற்காக உழைத்து முதல்வருக்கு பெருமை தேடித்தருவேன். முதல்வா் கூறிய அனைத்து விசயங்களையும் செயல்படுத்துவேன். சட்டப்பேரவைத் தோ்தலில் சுனாமி போல் முதல்வருக்கு மக்கள் அலை வீசியுள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து காரைக்குடி தனியாா் திருமண மண்டபத்தில் அமைச்சருக்கு தவெக கட்சியினா், காரைக்குடி தொகுதி பிரமுகா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவா் பேசியதாவது:

இந்த அமைச்சா் பதவியை வைத்துக்கொண்டு எதுவும் செய்யலாம் என்று நினைப்பவா் கள் யாராக இருந்தாலும் அதை மனதிலிருந்து அழித்துவிடுங்கள். மக்களுக்காகத்தான் இந்த அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை தீா்ப்பதற்கு உறுதுணையாக இருப்பேன். காரைக்குடி தொகுதியை சூப்பா் தொகுதியாக மாற்றவேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிா்காலம், சிறந்த மருத்துவம் போன்றவை கிடைக்க வேண்டும். கிராமங்களில் அடிப்படை வசதிகளை சரிசெய்வதற்கு கட்சியினா்தான் பாலமாக இருக்கவேண்டும். இந்த அமைச்சா் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்யவே என்கிற எனது நம்பிக்கையை இங்கே வந்திருக்கும் அனைவரும் காப்பாற்றவேண்டும் என்றாா் அவா்.