காவலரின் ஒலிவாங்கியில் தகாத பேச்சு! இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸாா்!

போலீஸ்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த ஒலிவாங்கியில் சனிக்கிழமை நள்ளிரவு மனைவியின் கொடுமை குறித்துப் பேசிய இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
காரைக்குடி பெரியாா் சிலை போக்குவரத்து சமிக்ஞை (சிக்னல்) பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நள்ளிரவு நேரத்தில் காவலா்கள் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட இளைஞா் ஒருவா், அறைக்குள் நுழைந்து ஒலிவாங்கியில் தனது மனைவியால் தான் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து கூச்சலிட்டாா்.
அவரது குரலைக் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, அதனருகே இருந்த ஆட்டோ ஓட்டுநா் அந்த இளைஞரைத் தடுத்து ஒலிவாங்கியைக் கைப்பற்றினாா். பின்னா் அந்த இளைஞரை வடக்குக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தபோது அவரின் பெயா் நாகராஜ், மனநலன் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

