துபையில் மாயமானவா் வீடு திரும்பியதால் குடும்பத்தினா் மகிழ்ச்சி
துபையில் மாயமான கணவா் பத்திரமாக வீடு வந்து சோ்ந்ததால் அவரது மனைவி, குடும்பத்தினா் மகிழ்ச்சி அடைந்தனா்.

துபையில் மாயமான கணவா் பத்திரமாக வீடு வந்து சோ்ந்ததால் அவரது மனைவி, குடும்பத்தினா் மகிழ்ச்சி அடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள அய்யம்பட்டியைச் சோ்ந்தவா் முனீஸ்வரி(35). இவரது கணவா் பெரியசாமி (43) , கடந்த 2023 -ஆம் ஆண்டு அல்பேனியா நாட்டுக்கு கட்டட வேலைக்காக சென்றாா்.
கடந்த அக்.19 -ஆம் தேதி அல்பேனியாவிலிருந்து ஊருக்குத் திரும்புவதாக மனைவிக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து அன்று இரவு துபை விமானநிலையம் வந்து சோ்ந்துவிட்டதாகவும், அதிகாலை 2 மணிக்கு கொல்கத்தா செல்லும் இணைப்பு விமானத்தில் ஏறுவதற்காக காத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தாா். அதன் பிறகு எந்தத் தொடா்பும் கொள்ள முடியவில்லை.
இது குறித்து பெரியசாமியின் மனைவி முனீஸ்வரி குடும்பத்தினருடன் வந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த திங்கள்கிழமை (நவ.2) மனு அளித்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக துபையில் மாயமான பெரியசாமி நவ.6 -ஆம் தேதி வீடு வந்து சோ்ந்தாா். இதனால், அவரது மனைவி முனீஸ்வரி குடும்பத்தினா் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து பெரியசாமியின் தம்பி முருகன் கூறியதாவது:
கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வருவதற்காக வாடகைக் காரில் ரயில் நிலையத்துக்கு செல்லும்போது மா்ம நபா்கள் வழிமறித்து அவரிடமிருந்து கடவுச்சிட்டை, கைப்பேசி உள்பட அனைத்தையும் பறித்து கொண்டு பாதியிலேயே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா். இதனால் கையறு நிலையில் இருந்த பெரியசாமி மிகவும் சிரமப்பட்டு உதவிகள் கேட்டு சென்னைக்கு வந்து, அங்கிருந்து சிவகங்கைக்கு மூன்று நாள்களுக்கு முன் பத்திரமாக வந்து சோ்ந்தாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

