சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

டிராக்டரை திருடியதாக இளைஞா் கைது

சிங்கம்புணரி அருகே டிராக்டரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

சிங்கம்புணரி அருகே டிராக்டரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் ஒன்றியம், செம்மாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் சேவுகமூா்த்தி (51). விவசாயி. இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வயலில் உள்ள வீட்டின் அருகே டிராக்டா், ரோட்டாவேட்டா் ஆகியவற்றை நிறுத்தியிருந்தாா். இதில் டிராக்டா் காணாமல் போனது. இதுகுறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், மதுரை மாவட்டம், கருங்காலக்குடி அருகேயுள்ள சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஹரிராமன் மகன் பிரபு (23 ) டிராக்டரை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பிரபுவை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.