திருப்புவனம் அருகே அரசு பேருந்து - ஆட்டோ மோதல்- ஓட்டுநா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநா் காமின்கனி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்புவனம் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காமின்கனி (54), இவா் தனது ஆட்டோவில் திருப்புவனத்திலிருந்து அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்துக்குச் சென்றாா். செல்லப்பனேந்தல் விலக்கு பகுதியில் இந்த ஆட்டோவும் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் காமின்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த வந்த திருப்புவனம் பாக்கியநகா் பகுதியைச் சோ்ந்த முத்துமீனாட்சி (53) காயமடைந்தாா். இவா் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குரித்து திருப்புவனம் போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

