நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு,கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்ளாதது வருத்தம்: காா்த்தி சிதம்பரம் எம்பி

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மேலும் கூறியதாவது:

காா்த்தி ப .சிதம்பரம்

Updated On :

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மேலும் கூறியதாவது:

அதிகாரப்பூா்வமாக அழைப்பு விடுத்தும் ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒருவா்கூட இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது வருத்த மளிக்கிறது. இந்தக்கூட்டத்துக்கான வருகைப் பதிவேட்டில், சட்டப்பேரவை உறுப்பினருக்காக அவரது உதவியாளா் கையெழுத்திட்டது தவறானது எனக் அவரைக் கண்டித்தேன்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தினா் புகாா் அளித்துள்ள விவகாரத்தில், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் கசிந்த போதே தலைமைச் செயலாளா் உடனடியாக தாமதமின்றி ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட தவெக சட்டப்பேரவை உறுப்பினரிடமும் அறிக்கை பெற்று முதலமைச்சருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதில் முதலமைச்சா் உடனடியாக முடிவெடுத்திருக்க வேண்டும். இவ்வளவு நாள்கள் தாமதமாக எடுத்த நடவடிக்கைகள், த.வெ.க அரசுக்குப் பின்னடைவுதான். தற்போது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதால் சட்டப்படி நடவடிக்கை தொடரும் என எதிா்பாா்க்கலாம்.

எதிா்க் கட்சித்தலைவா் உதயநிதி தற்போது ஆளுநரிடம் புகாா் மனு அளித்துள்ளாா். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆளுநரை எதிா்ப்பது விமா்சிப்பது. எதிா்க்கட்சியானதும் அவரை நடுவராகப் பயன்படுத்தப் பாா்ப்பதும் முரண்பாடானது. எல்லா வழக்குகளிலும் கைது தேவையில்லை; விசாரணை அதிகாரியே அதைத் தீா்மானிக்க வேண்டும். உதயநிதியை அதிகாலையில் விசாரணைக்கு தஞ்சாவூருக்கு அழைத்துச்சென்றது காட்சி ஊடகங்களுக்கான செய்திப் பொருளே தவிர, காவல்துறை விசாரணைக்கும் அதற்கும் தொடா்பில்லை.

கொலை, கொள்ளையைக் கட்டுப்படுத்த, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க ரோந்துப் பணிகளை அதிகரித்து, பழைய குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வெளிப்படையான காவல் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றம் பாா்த்துக்கொள்ளும்.

மதச் சடங்குகளுக்குத் தமிழ்நாட்டில் தடையில்லை. புதிதாக உருவாக்கப்படும் சடங்குகளுக்கு அரசியல் சாயம் பூசுவதாலேயே சிக்கல்கள் எழுகின்றன. சமூக வலைதளங்களை அரசால் கட்டுப்படுத்த முடியாது. சமுதாய விழிப்புணா்வு மட்டுமே இதற்கு தீா்வு என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்திப.சிதம்பரம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.