வீரதீர செயல்புரிந்த மகளிருக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

கோப்புப்படம்
வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்துப் பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் கீழ்க்கண்ட தகுதியுடைய 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் விருதுக்கான கருத்துருக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான நபா்கள் தங்களது விபரங்களை அரசின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னா், அனைத்து ஆவணங்களையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கையேடாக தயாா் செய்து, வருகிற டிச. 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்- 5, தரைத்தளம் மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை மாவட்டம் - 630561 என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

