பேருந்து நிறுத்தமாக செயல்படத் தொடங்கியுள்ள தேனி பழைய பேருந்து நிலையம்

தேனியில் நகராட்சி காமராஜர் நினைவு பழைய பேருந்து நிலையம், புறநகர் மற்றும் நகர பேருந்துகளின் நிறுத்தமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

தேனியில் நகராட்சி காமராஜர் நினைவு பழைய பேருந்து நிலையம், புறநகர் மற்றும் நகர பேருந்துகளின் நிறுத்தமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

      தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, போடி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து தேனிக்கு வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை சாலையில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றனர். தேனியில் இருந்து போடி, கம்பம் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றன.

       மதுரை சாலையை பேருந்து நிறுத்தமாக பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கு சிரமமும் ஏற்பட்டது. மதுரை சாலை பேருந்து நிறுத்தத்தை தடை செய்து போடி, கம்பம் பகுதியில் இருந்து வரும் பேருந்துகளும் நகராட்சி பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

   இந்த நிலையில், பண்டிகை காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை சாலை பகுதியை பேருந்து நிறுத்தமாக பயன்படுத்தக் கூடாது என்று வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். மதுரை சாலை பேருந்து நிறுத்தத்தால் போக்குவரத்து குளறுபடி ஏற்படுவது குறித்து காவல் துறை சார்பில் போக்குவரத்து குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

       இதையடுத்து, தற்போது போடி, கம்பம் பகுதியில் இருந்து தேனிக்கு வரும் பேருந்துகளும், தேனியில் இருந்து போடி, கம்பம் பகுதிகளுக்குச் செல்லும் புறநகர் மற்றும் நகர பேருந்துகள் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதனால், நேருசிலை மும்முனை சாலை சந்திப்பு  சிக்னலில் பேருந்துகள் காத்திருக்க வேண்டியதில்லை.

     பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளுக்கு இடையே ஆட்டோ மற்றும் கார்கள் அனுமதிக்கப்படுவதால் பேருந்துகள் வரிசையாக நின்று செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com