தேனியில் அனுமதியின்றி புதிய திரைப்பட சி.டி. விற்றதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி, நகராட்சி புதிய பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளில் அனுமதியின்றி புதிய திரைப்பட சி.டி. விற்றதாக கடை விற்பனையாளர்கள் போடியைச் சேர்ந்த பாண்டி (24), தேனியைச் சேர்ந்த மணிகண்டன் (33), பழைய பேருந்து நிலைய வணிக வளாக கடைகளில் விற்பனையாளர்கள் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த விஜய் (22), பெரியகுளத்தைச் சேர்ந்த வீரர்அப்துல்லா (24) ஆகியோரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி, என்.ஆர்.டி.நகர் சாலையில் உள்ள சி.டி. விற்பனை கடையில் அனுமதியின்றி புதிய திரைப்பட சி.டி. விற்றதாக பெரியகுளத்தைச் சேர்ந்த அப்துல் (33), பகவதியம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் புதிய திரைப்பட சி.டி. விற்றதாக அல்லிநகரத்தைச் சேர்ந்த ரவி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 427 புதிய திரைப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.