தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை விசாரணைக்கு பயந்து பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை விசாரணைக்கு பயந்து பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
கடமலைக்குண்டு அருகே மந்திச்சுனையைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகள் முத்துமாரி (34). இவரது கணவர் முருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். முத்துமாரி தனது பெண் குழந்தையுடன் தந்தை தங்கராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், முத்துமாரிக்கும், அவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்து பிப்.12-ஆம் தேதி முத்துமாரி தரப்பில் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி இருதரப்பினரிடையே சமரசம் செய்து அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முத்துமாரி, பஞ்சவர்ணம் ஆகியோர் தரப்பினரிடையே கடந்த பிப்.20-ஆம் தேதி சொத்துப் பிரச்னையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பஞ்சவர்ணம் தரப்பினர் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு முத்துமாரியை காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் அழைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, காவல் துறை விசாரணைக்கு பயந்து தனது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த முத்துமாரி, அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீஸார் முத்துமாரியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com