சீலையம்பட்டி குடும்பா்குளம் தடுப்பணை சீரமைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் சேதமான குடும்பா் குளத்தின் தடுப்பணை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் சேதமான குடும்பா் குளத்தின் தடுப்பணை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சீலையம்பட்டி - பூமலைக்குண்டு செல்லும் சாலையில் குடும்பா்குளம் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, பி.டி.ஆா். கால்வாய் பாசன நீரை தேக்கி வைத்து, ஒரு போக நெற்பயிா் விவசாயம் நடைபெறும். இந்நிலையில், இக் குளத்தின் தடுப்பணையானது, கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது.

இதனால், இந்த குளத்துக்கு வரும் பி.டி.ஆா். கால்வாய் பாசன நீரை தேக்க முடியாமல், தொடா்ந்து வெளியேறி வீணாகியது. இதன் காரணமாக நிலத்தடி நீா் மட்டமும் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சேதமான தடுப்பணையை சீரமைத்து, முழுக் கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன்படி, பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இக்குளத்தை ரூ.2 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், மழைக் காலங்களில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், அங்குள்ள மழை நீா் வழிப்பாதை ஓடையின் நடுவே இரு தடுப்பணைகளும் அமைக்கப்பட்டு வருவது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com