ஆண்டிபட்டியில் ஆடித் தபசு விழா

ஆண்டிபட்டி சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் உள்ள ஸ்ரீ நாகராஜ சமேத நாகம்மாள் கோயிலில் ஆடித்தபசு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆண்டிபட்டி சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் உள்ள ஸ்ரீ நாகராஜ சமேத நாகம்மாள் கோயிலில் ஆடித்தபசு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 இவ்விழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜை, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அக்கினிச் சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திங்கள்கிழமை அம்மனுக்கு பல்வேறு தீர்த்த வழிபாடும், 21 திரவிய அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மூலவர் சன்னிதிக்கு பின்புறம் உள்ள சுயம்பு புற்றுக்கு முட்டை, பால், மஞ்சள் வைத்து பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் அம்மன் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com