வாட்டத்தை போக்கிய மழை பூத்துக்குலுங்கும் மானாவாரி பயிர்கள்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்வதால் மானாவாரி பயறு மற்றும் சிறு தானியங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்வதால் மானாவாரி பயறு மற்றும் சிறு தானியங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன.
  தேனி மாவட்டம் லோயர்கேம்ப் கூடலூர், கம்பம் ஆகிய பகுகளில் மேற்கு மலை அடிவாரத்தில்,  ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான, கம்பு, சோளம், மொச்சை, கடலை, அவரை மற்றும் பயறு வகைகள் பயிரிடப்பட்டு வந்தன.
    இவற்றிற்கு நீராதாரம் தென் மேற்கு பருவமழை தான். நடப்பு ஆண்டில் பருவ மழை தாதமதமாக பெய்ததால், செடி மொச்சை, தக்காளி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியம் மற்றும் பயறு வகைகள் நீரின்றி காய்ந்தன.  தற்போது கடந்த 15 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால், செடிகள் உயிர்ப்பெற்று தளிர்த்து பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து, விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com