ஆண்டிபட்டி முத்தமிழ் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி நகரில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் முத்தமிழ் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி நகரில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் முத்தமிழ் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் வேலப்பர் கோவில் சாலைப்பிரிவில் முத்தமிழ் பூங்கா உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் செயற்கை நீரூற்று, பூச்செடிகள், சிறுவர் விளையாட்டு, சிமெண்ட் சாய்வு நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. 
 ஆரம்பகட்டத்தில் இந்த பூங்காவுக்கு மாலை நேரத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். ஆண்டிப்பட்டி நகரில் பொழுதுபோக்கு இடமாகவும் இப்பூங்கா காணப்பட்டது. 
பூங்கா தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் மட்டுமே முறையாக பராமரிக்கப்பட்டது. அதன்பின்னர் பூங்காவை பராமரிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக முத்தமிழ்பூங்கா அதன் பொழிவை இழந்தது. இதற்கிடையே முத்தமிழ் பூங்காவிற்கு எதிரே அரசு மதுபான கடை திறக்கப்பட்டதால் பெண்கள் வருகை அடியோடு குறைந்தது. பராமரிப்பு இல்லாத முத்தமிழ் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள் ஆகியவை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. 
தற்போது முத்தமிழ்பூங்காவை சிலர் மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த முத்தமிழ்பூங்கா வளாகத்தில் ஒரு கொலையும் நடைபெற்றதால் பூங்காவிற்கு பொதுமக்கள் யாரும் வருவதே இல்லை. பொலிவுடன் காணப்படும் பூங்கா தற்போது மதுபான கூடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
எனவே பொலிவு இழந்து காணப்படும் முத்தமிழ்பூங்காவை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com