தேனி: தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.கந்தசாமி, திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இவருக்குப் பதிலாக, திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் கே.ரமேஷ், தேனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை சனிக்கிழமை, அரசு முதன்மைச் செயலா் கே.சண்முகம் பிறப்பித்துள்ளாா்.