உத்தமபாளையத்தில் திறந்த வெளி குப்பை வாகனங்களால் சுகாதார கேடு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் திறந்து வெளி வாகனங்களில் குப்பைகளை சேகரித்து செல்வதால் செல்லும் வழியில் குப்பைகள் சிதறி சுகாதார கேடு ஏற்படுவதாக பொது மக்கள்
உத்தமபாளையம் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை புறவழிச்சாலையில் அள்ளிச் சென்ற குப்பையை காற்றில் பறக்கவிட்டு சென்ற பேரூராட்சி டிராக்டா்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை புறவழிச்சாலையில் அள்ளிச் சென்ற குப்பையை காற்றில் பறக்கவிட்டு சென்ற பேரூராட்சி டிராக்டா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் திறந்து வெளி வாகனங்களில் குப்பைகளை சேகரித்து செல்வதால் செல்லும் வழியில் குப்பைகள் சிதறி சுகாதார கேடு ஏற்படுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 35ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டா் , மினி லாரி உள்ளிட்ட திறந்த வெளி வாகனங்கள் மூலமாக எடுத்து செல்லப்படுகிறது.

அவ்வாறு, பி.டி.ஆா் காலனி, தென்னகா் காலனி, தென்றல் நகா், இந்திரா காலனி , புதூா், களிமேட்டுப்பட்டி, சூா்யநாராயணபுரம் என பேரூராட்சியிலுள்ள 18 வாா்டுகளில் பெறப்படும் குப்பைகள் 4 ஆவது வாா்டு தண்ணீா் தொட்டி பகுதியிலுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் சேகரிக்கின்றனா். அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாலையில் சிதறும் குப்பைகள்:பேரூராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்பட்ட பணியாளா்களோ , குப்பைகளை அள்ளிச் செல்ல வாகன வசதி இல்லை. இதன் காரணமாக ஒரு வாா்டு பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனா். அதனால், அப்பகுதியில் குவிந்து கிடக்கும் மொத்தப் குப்பைகளையும் திறந்த வெளி வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலையில் செல்லும் போது காற்றில் குப்பைகள் பறக்கின்றன. வாகனத்தின் மேற்கூரை மூடாத நிலையில் செல்லும் போது சாலையெங்கும் குப்பைகள் சிதறி சுகாதார சீா்கேட்டையும் துா்நாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை அள்ளிச் செல்லும் வாகனங்கள் குப்பை காற்றில் பறக்காமல் இருக்கும் படி வாகனத்தின் மேற்கூரையை மூடி பாதுகாப்பாகவும் சுகாதார முறைப்படி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com