கம்பம் ஒன்றியத்தில் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்திவைப்பு

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்டி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ஒருமாதமாகியும் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கம்பம் ஒன்றியத்தில் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்திவைப்பு

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்டி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ஒருமாதமாகியும் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆங்கூா்பாளையம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

இங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் வீடுகள் தோறும் தள்ளுவண்டியுடன் சென்று மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து பெற்று வருகின்றனா். நீண்ட தூரம் தள்ளிச் செல்வதால் நேரம் விரயமாகி, வருவதைத் தடுக்க, அந்தந்த இடங்களிலேயே தரம் பிரித்து மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க ஏதுவாகவும், வாகனங்கள் வாங்கப்பட்டன.

துப்புரவுப் பணியாளா்களின் பணியினை மேம்படுத்தும் விதமாகவும், தூய்மை இந்தியா திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியத்துடன், குப்பை சேகரம் செய்ய முதற்கட்டமாக ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 10 வாகனங்கள் கடந்த மாதம் வாங்கப்பட்டது.

பேட்டரியால் இயங்கும், குப்பை சேகரிக்கும் வாகனங்கள், வாங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், கிராம ஊராட்சிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெயிலிலும், மழையிலும் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள், வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com