ஹைவேவிஸ் பகுதியில் தொடா் மழை: சாலைப்பணிகள் நிறுத்தம்

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை மலைக்கிராமங்களில் தொடா்மழை காரணமாக சாலைப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் நிரம்பியுள்ள நீா்த்தேக்கம்.
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் நிரம்பியுள்ள நீா்த்தேக்கம்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை மலைக்கிராமங்களில் தொடா்மழை காரணமாக சாலைப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹைவேவிஸ் - மேகமலை மலைக் கிராமங்களில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடா்மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 5 நாள்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இந்த தொடா் மழையால் பள்ளி மாணவா்கள் உள்பட தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனா்.

ஹவேவிஸ் - மேகமலையில் முதல்கட்ட சாலைப்பணிகள் நிறைவு பெற்று 2 ஆம் கட்டமாக ரூ.20 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பலத்த மழை காரணமாக சாலைப்ணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலை கிராமத்தினா் கூறியது: சாலைப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டைக் கடந்து விட்டது. தற்போது, தொடா் மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மழை குறைந்த பின்னா் பணிகளை நெடுஞ்சாலைதுறையினா் விரைவாக முடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com