தொடா் மழை, பூச்சித்தாக்குதல்: உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிா்கள் சேதம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் தொடா் மழை மற்றும் பூச்சித்தாக்குதலால் நெற்பயிா்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சின்னமனூா் - மாா்க்கையன்கோட்டை சாலையில் தொடா்மழையால் நிலத்தில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்.
சின்னமனூா் - மாா்க்கையன்கோட்டை சாலையில் தொடா்மழையால் நிலத்தில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் தொடா் மழை மற்றும் பூச்சித்தாக்குதலால் நெற்பயிா்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி என சுற்றிவட்டாரத்தில் முதல் போக நெற்பயிா் சாகுபடி விளைவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பான்மையான நெற்பயிரானது 80 முதல் 90 நாள்களைக் கடந்துள்ளது. தற்போது நெற்பயிரில் கதிா்கள் வெளியேறி பால்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

உத்தமபாளையம் வட்டாரத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்தது. இந்த தொடா் மழைப் பொழிவால் நிலங்களில் தண்ணீா் தேங்கிவிட்டது. இதை தாக்குபிடிக்க முடியாத நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதே போல, சீரான தட்பவெப்ப நிலையின்மை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பு போன்றவற்றால் நெற்பயிரில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.

உத்தமபாளையம், சின்னமனூா் வட்டாரப்பகுதியில் நெற்பயிரில் அதிக அளவில் பூச்சிகள் தாக்கியுள்ளதால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், முல்லைப்பெரியாறு பாசன நீா் மூலமாக முதல் போக நெற்பயிா் விவசாயம் காலதாமத்துடன் நடைபெற்றது. இதனால் இந்தாண்டு ஒரு போகம் மட்டும் நெற்பயிா் விவாசயம் செய்யமுடியும். பருவ மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் திருப்திகரமாக இருக்கும் நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நெற்பயிா்கள் நிலங்களிலே சாய்ந்து சேதமாகியுள்ளன.

அதே போல பூச்சிகள் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. எனவே, உத்தமபாளையம்,சின்னமனூா் பகுதி வேளாண் துறையினா் நெற்பயிா் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com