உள்ளாட்சித் தோ்தல்: தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,177 போ் வேட்பு மனு தாக்கல்

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிட வெள்ளிக்கிழமை மொத்தம் 1,177 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிட வெள்ளிக்கிழமை மொத்தம் 1,177 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இதில், மொத்தமுள்ள 1,399 பதவிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) வரை 661 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற 5-வது நாளான வெள்ளிக்கிழமை, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 24 போ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 208 போ், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 180 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 765 போ் உள்பட மொத்தம் 1,177 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

சனிக்கிழமையும் வேட்பு மனு தாக்கல்:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையும் வழக்கம் போல காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், இம் மாதம் 16-ம் தேதி, மாலை 5 மணிக்கு வேட்பு மனு தாக்கல் முடிவடையும் என்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com