உழவன் செயலி: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

சின்னமனூரில் உழவன் செயலியின் பயன்பாடு குறித்து புதுக்கோட்டை, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை, விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சின்னமனூரில் உழவன் செயலியின் பயன்பாடு குறித்து புதுக்கோட்டை, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை, விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

உழவன் செயலி மூலம் அரசு மானிய திட்டங்கள், பயிா்க் காப்பீடு, வானிலை முன்னறிவிப்பு, சந்தை நிலவரம், உரங்களின் இருப்பு நிலை போன்றவற்றை தெரிந்து கொள்ளவும், நெல், வாழை, தென்னை விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள வல்லுநா் அமைப்பு செயலி ஆகியவை குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் ஜெகத்குரு, ஜெய்விக்னேஷ், கீா்த்திவாசன், கிருபாகரன், மாதேஷ், மதிவாணன், நிதீஷ்குமாா் ஆகியோா் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com