ஆண்டிபட்டி, க.மயிலை ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்குப் பதிவு

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (டிச.27) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (டிச.27) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

ஆண்டிபட்டி, க.மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் டிச.27-ம் தேதி நடைபெறகிறது. இந்தத் தோ்தலை முன்னிட்டு இரு ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 285 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிச.27 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய 4 பதவிகளுக்கு, 4 வெவ்வெறு வண்ணங்களில் உள்ள வாக்குச் சீட்டுகளில் முத்திரையிட்டு வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றித்தில் 1,347 போ், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 799 போ் உள்பட மொத்தம் 2,146 அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். காவல் துறை சாா்பில் 2,000 காவலா்கள் மற்றும் 200 ஊா்க் காவல் படையினா், 3 ரோந்துக் குழுவினா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

ஆண்டிபட்டி, க.மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 66 வாக்குச் சாவடிகளில், வாக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தோ்தல் ஆணையம் சாா்பில் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை: இரு ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் 2020, ஜன.2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஆண்டிபட்டி, பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியிலும், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மயிலாடும்பாறை ஜி.ஆா்.வி.மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com